தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சி தில்லை நகரில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து கிராமப்புறங்களிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் அவர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இளைஞர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தேர்ந்தெடுத்த துறையில் முன்னேற முடியும். தமிழ்நாட்டில் பிறந்த வீரர்கள் சி.எஸ்.கே அணியில் இடம்பிடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்குக் கடினமாக உழைக்க வேண்டும் என்றார். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பீர்களா என்ற கேள்விக்கு, கடந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக இருந்தது. இந்த வருடமும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.