திருச்சி: அண்ணா உயிரோடு இருந்தால் இந்தியை ஏற்று இருப்பார்

62பார்த்தது
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் , காந்திமார்க்கெட் அருகே நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக டிடிவி தினகரன் அளித்த பேட்டியில்:

தேசிய ஜனநாயக கூட்டணியில் அ. ம. மு. க அங்கம் வகிக்கிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில் பா. ஜ. கட்சியுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்புள்ளார். எடப்பாடி போன்ற ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதை விரும்புகின்றனர்.
பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பலவீனம் அடைந்துள்ளது.
அவர் திமுக வெற்றிக்கு பாடுபடுகிறார்.

முன்னாள் முதல்வர் அண்ணா1967 ல் ஆட்சிக்கு வந்த பிறகு இரு மொழிக் கொள்கை கொண்டு வந்தார்.
காலப்போக்கில் அனைத்து இந்தியாவிற்கும் இணைப்பு மொழியாக ஒரு பொது மொழி உருவாக வேண்டும், அதுவரை ஆங்கிலம் தொடர வேண்டும் என்றார். அண்ணா தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்று இருப்பார். அண்ணா உயிரோடு இருந்திருந்தால் இந்தியா முழுவதும் இணைப்பு மொழியாக இந்தியை உறுதியாக தமிழ்நாட்டில் அனுமதித்து இருப்பார் என்பது என் கருத்து என்றார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி