திருச்சி உழவர் சந்தை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று (ஜனவரி 11) செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில் மத்திய பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். எந்தவிதமான நல்ல திட்டங்களையும் செய்யவில்லை.
குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயிகளின் விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை, விவசாய நிலங்களில் இருக்கும் பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.