திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் அதிமுக சார்பில் இன்று காலை "யார் அந்த சார்?" என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இதை பார்த்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "இவர் தான் அந்த சார்" என்ற வாசகம் அடங்கிய பேனரை, திமுகவினர் வைத்த பிளக்ஸ் பக்கத்திலேயே வைத்தனர். இதனால் கடுப்பான அதிமுகவினர் இதுகுறித்து போலிசாரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் இருதரப்பினரையும் பிளக்ஸ் பேனரை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.