அதிமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ. சீனிவாசன் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், நிர்வாகிகள் வனிதா, ரஜினிகாந்த், வெங்கட்பிரபு, பாலாஜி, அப்பாஸ், ஜான் எட்வர்டு, ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், சில்வர் சதீஷ், உறையூர் சாதிக், புத்தூர் பாலு மற்றும் அன்பழகன், வாசுதேவன், புத்தூர் ராஜேந்திரன், இலியாஸ், கலில்ரஹ்மான், சத்தியமூர்த்தி, வக்கீல் கங்கை செல்வன், நத்தர்ஷா, சிங்கமுத்து, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.