திருச்சி செட்டியார்கள் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

50பார்த்தது
திருச்சி செட்டியார்கள் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
கண்ணகி குல செட்டியார்கள் பேரவை, தமிழ்நாடு அனைத்து செட்டியார்களின் அரசியல் சமூக பாதுகாப்பு இயக்கமாக செயலாற்றி வருகிறது. இதன் 2-வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்தியம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாச மகாலில் நடைபெற்றது. கண்ணகி குல பூவையர் பாசறை மாநில பொதுக்குழு நித்யா கல்யாணசுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பேரவை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமண குமார் வரவேற்புரை ஆற்றினார். பொதுக்குழுவில் தலைமை ஒருங்கிணைப் பாளர் பாபு பத்மநாபன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மங்கள தேவி கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் பி. எஸ். எம். முருகன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சத்யம் குரூப்ஸ் நிறுவனங்கள் சென்னை சேர்மன் எஸ். பி. என். சத்தியமூர்த்தி, என். எம். மருத்துவமனை ஆர். நடராஜன், நகரத்தார் நமது செட்டிநாடு வரலாற்று எழுத்தாளர் இளங்கோ, அரசு மெடிக்கல் குரூப் சேர்மன் சேதுராமன், பேராவூரணி எஸ். டி. டி. பஸ் நிறுவனங்கள் சிதம்பரம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஜெ. ராஜசேகர் நன்றி கூறினார். கூட்டத்தில் தேனி மாவட்டம் கம்பம் மேகமலை கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபடும் வகையில் பளியங்குடி வழியாக பாதை அமைத்து உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி