திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று, மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இவ்விழாவினை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.