பெரம்பலூரில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு துறையூர் அருகே உள்ள தனியார் நெல் அரவை மில்லுக்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரி அடைக்கம்பட்டி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்து நெல் மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. லாரி ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார்.