நான் பேசியதை திரித்துப்போட்டு விட்டார்கள்-கே. என். நேரு பேட்டி

59பார்த்தது
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

லால்குடி கூட்டத்தில் நான் பேசியது சர்ச்சையானது அல்ல அதிமுகவில் 38 வருடம் கழித்து இரண்டாவது முறையாக வந்தேன் என்று தெரிவித்துள்ளார்கள். அதேபோல தளபதியும் மீண்டும் வரவேண்டும் வெற்றி தேடி தர வேண்டும்.
தோழமை வேண்டாம் என்று நான் சொல்லவில்லை அவர்களாக சொல்கிறார்கள்.

எதிரணி பலமில்லை என்று நான் சொன்னேன் எந்த நிலையில் மீண்டும் திமுக கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தேன். கூட்டணி வைத்துக் கொள்வது தலைவருடைய நான் கூற முடியாது. மீண்டும் திமுக ஆட்சி தொடர்ந்து வரவேண்டும் அதற்கு எல்லாரும் தயாராக இருக்க வேண்டும் எந்த நிலையிலும் நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறினேன்.

6 தேர்தல்களிளும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் வெற்றி பெறும் அதற்காக ஆயத்தங்கள் தான் செயல் வீர கூட்டங்களில் பேசி வருகிறேன்.

இந்த கட்சியில் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் அவரிடம் தான் கேட்க வேண்டும் தலைவர் சொன்னால் வேலை செய்யும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்த கூட்டணி வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்பார்.
பத்தாண்டு காலம் இந்த கூட்டணியை தொடர்ந்து பலமாக வைத்துள்ளார். நீங்கள் எதிர்பார்ப்பது போல் பதில் வரவில்லை என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி