சிறுவன் மீது ஏறி இறங்கிய புல்லட்.. எஸ்ஐ மகன் செய்த காரியம்

79பார்த்தது
கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தெருவில் கடந்த 21.9.2024 சனிக்கிழமை அன்று காலை 8: 30 மணி அளவில் விளையாடி கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை அதே பகுதியை சேர்ந்த கே. கே. நகர் SSI முருகராஜ் என்பவரின் மகன் (10ம் வகுப்பு மாணவன்) ஓட்டி சென்ற புல்லட்டில் ஏற்றிவிட்டு அலட்சியமாக அச்சிறுவனை திட்டி சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தற்போது அச்சிறுவன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அடிபட்ட குழந்தையின் தாத்தா (ஓய்வு பெற்ற SI) இந்த சம்பவம் குறித்து கே. கே. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி