திருச்சி மாநகரில் தொடரும் கோடை மழை

1551பார்த்தது
திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்கிறது. இதுபோல இரவு 7. 30 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் தொடங்கிய கன மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. மாநகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சாலைப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது. திடீர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக தெருவோர வியாபாரிகளும் வாகன ஓட்டிகளும் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் நீராதாரம் பெருகுவதால் விவசாயிகளும், வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை அளவு: திருச்சி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: கல்லக்குடி- 2. 4, சமயபுரம் -4, சிறுகுடி 4. 8, வாத்தலை -2. 2, மணப்பாறை - 5. 2, பொன்னணியாறு-4. 6, கோவில்பட்டி - 11. 2, மருங்காபுரி 2. 4, முசிறி -7, புலிவலம்-8, துவாக்குடி 2, திருச்சி விமான நிலையம் -0. 9, திருச்சி டவுன் 1. 3 ஆகும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 56 மிமீ மழையும் சராசரியாக 2. 33 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி