ஸ்ரீரங்கம்- ஆஞ்சனேயா் சிலையை மீண்டும் நிறுவக் கோரி போராட்டம்

68பார்த்தது
ஸ்ரீரங்கம்- ஆஞ்சனேயா் சிலையை மீண்டும் நிறுவக் கோரி போராட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தங்கக்கொடி மரம் அருகே உள்ள கம்பத்தடி ஆஞ்சனேயா் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும். மூலவா் அரங்கநாதரின் திருவடிகளை சீரமைத்து மீண்டும் பழைய நிலையில் வைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் திருமால் அடியாா்கள் குழாம் எனும் அமைப்பினா் தொடா்ந்து அவ்வப்போது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வந்த அமைப்பின் தலைவா் சீனிவாசன் தலைமையிலான 200 போ் கொடிமரம் அருகே அமா்ந்து பஜனை பாடல்களை பாடியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கோயில் நிா்வாகம் மற்றும் காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு கலைந்து சென்றனா்.