இயற்கை விவசாயிகள் பங்கேற்ற விதை திருவிழா

61பார்த்தது
இயற்கை விவசாயிகள் பங்கேற்ற விதை திருவிழா
திருச்சியில் தர்ம இயக்கம் சார்பாக
சோழ தேசத்தில் விதை திருவிழா
திருச்சியில் நடைபெற்றது. திருச்சி திண்ண கோணம் பசுமை சிகரம் அறக்கட்டளை நிறுவனர் யோகநாதன் தலைமை வகித்தார்.
குத்தூசி திரைப்பட இயக்குனர் சிவசக்தி முன்னிலை வகித்தார், கிராமாலயா நிறுவனர் பத்மஸ்ரீ எஸ். தாமோதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஸ்ரீ ஜெயரெங்கா இயற்கை மருத்துவமனை மற்றும் யோகா ஆராய்ச்சி மையம் மேலாண் இயக்குனர் இயற்கை மருத்துவர் ஆர். சுகுமார்
நோய் தீர்க்கும் இயற்கை உணவு முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
கிரியா பவுண்டேசன் சிவபாலன் இயற்கை வேளாண்மை குறித்து பேசினார். வேளாண் பொறியியலாளர் பிரிட்டோ ராஜ் விவசாயிகளோடு கலந்துரையாடினார்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இயற்கை வாழ்வியலும் யோக விஞ்ஞானமும் தலைப்பிலும்,
தலைவர் சிவசங்கரசேகரன் மற்றும் சேப் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கஜோல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விதைத்தவன் உறங்கி விடுவான் விதைகள் உறங்குவதில்லை எனக்கூறி முருங்கை விதைகளை இலவசமாக வழங்கினார்கள். சிறுதானிய விதைகள், இயற்கை உரங்கள், மூலிகைள், மாடி தோட்டத்திற்கான காய்கறி விதைகள், பூச்சி விரட்டி உள்ளிட்டவை அரங்கில் இடம் பெற்றிருந்தன. , விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் பெருமக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி