திருச்சியை சேர்ந்தவர் எஸ். மெகக் இர்ஷா. இவர் புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். யோகா போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். மேலும் உலக சாதனை படைக்கும் முயற்சியாக திருச்சியில் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடத்திய உலக சாதனை நிகழ்ச்சியில், ஸ்டெட்ஸ் பாக்ஸ் ஸ்பிலிட். யோகா கால்களை விரித்தபடி 100 சதவீதம் யோக நிலையில் சுமார் பத்து நிமிடங்கள் செய்து சாதனை படைத்தார். இவற்றை நேரில் ஆய்வு செய்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர்டாக்டர் டிராகன் ஜெட்லீ உலக சாதனை பதக்கம், சான்றிதழ் , கோப்பை ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் பெற்றோர், உலக சாதனையாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.