திருச்சி மாவட்டத் தொழிலாளர் நல இணை ஆணையர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு எம். ஆர். முருகன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலர் க. சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
இதில் கிராம ஊராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின்கீழ், ஊதியம் நிர்ணித்து அரசிதழில் அரசாணை வெளியிட்ட நாள் முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். இதன்படி, மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குவோருக்கு ரூ. 14, 503 ம், தூய்மை காவலர், பள்ளி சுகாதார தூய்மைப் பணியாளர், மகளிர் திட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 12, 503, தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 12, 503, சுகாதார ஊக்குநர்களுக்கு ரூ. 15, 503, அனைத்து கணினி இயக்குநர்களுக்கு ரூ. 28, 650, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ. 56, 250, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ. 84, 150 என ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் நிர்வாகிகள் கிரேஸி ஹேலன், சுப்பிரமணி, கனகவல்லி உள்ளிட்ட பலர் கோரிக்கை முழக்கமிட்டனர்.