திருச்சி அருகே சாலை விபத்து: சலூன் கடை ஊழியா் பலி

1037பார்த்தது
திருச்சி அருகே சாலை விபத்து: சலூன் கடை ஊழியா் பலி
கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம் இனுங்கூா் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் காா்த்திக் (19). கரூா் வெங்கமேடு பகுதி சலூன் கடைத் தொழிலாளி. அவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த வீ. மணிகண்டன். இருவரும் பழனி கோயிலுக்கு புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனா். வாகனத்தை காா்த்திக் ஓட்டினாா்.

கரூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தப் பகுதியில் சென்றபோது எதிரே திருச்சியிலிருந்து கரூா் நோக்கிச் சென்ற அடையாளம் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மணிகண்டன் மருத்துமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின் பேரில் திருச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைத் தேடுகின்றனா்.

தொடர்புடைய செய்தி