மரத்திலிருந்து தவறி விழுந்து ஓய்வு பெற்ற அதிகாரி பலி

76பார்த்தது
மரத்திலிருந்து தவறி விழுந்து ஓய்வு பெற்ற அதிகாரி பலி
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பீடி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது61). ஒய்வு பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர். இவர் அவரது வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் காய் பறிப்பதற்காக ஏறி உள்ளார்.
அப்போது எதிர்பாத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் ஆல்பர்ட் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி ஆல்பர்ட் பரிதாபமாக உயிழந்தார். இது குறித்து அவரது மகன் அல்போன்ஸ் எட்வின் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி