திருச்சியில் தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளர் கிளாரா, தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க மாநில தலைவி சீதாலட்சுமி கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்
அதில் நாடு முழுவதும் வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 4 கோடிக்கு அதிகமாகவும் தமிழகத்தில் 20 லட்சம் பேரும் இருக்கின்றனர் அவர்களை பாதுகாக்கும் விதத்தில் நாடு முழுவதும் 60 சங்கங்கள் 20 தேசிய சங்கங்களை இணைத்து தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் மேடை செயல்பட்டு வருகிறது. வீட்டு வேலை தொழிலாளர்களை பாதுகாக்க நம் நாட்டிலும் எந்த விதமான சட்டங்களும் இல்லை வீட்டு வேலை தொழிலாளர்களில் 80 சதவீதம் பெண்களாக இருப்பதால் பலவிதமான துன்புறுத்தலுக்கும் பாலியல் வன்முறைக்கும் அவர்கள் ஆளாகின்றனர். எனவே வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க சட்டம் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் முத்தரப்பு வாரியம் அமைத்து அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு சமூக பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ பிஎப் பிடித்து மாதம் ரூபாய் 5 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு போதுமான நிதி ஆதாரமில்லாததால் உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. குறைந்தபட்ச நிதி உதவியும் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது