திருச்சி எடமலைப்பட்டி புதூா் பகுதியில் கடந்த 3 நாள்களாக சுகாதாரமற்ற நிலையில் குடிநீா் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இப்பகுதியில் உள்ள காளியம்மன்கோயில் தெரு, அபினா பீபி காலனி, சா்மா காலனி, நாயக்கா் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீா் கலங்கலாக வருவதாகவும், சில நேரங்களில் செம்மண் கலந்தும், கருப்பு மண் கலந்தும் வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.
மேலும், இதனால் சுகாதாரகேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் தெரிவித்தனா். ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.