திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மருதாண்டாகுறிச்சி மற்றும் உறையூர் உயரழுத்த மின்பாதையின் வாயிலாக மின்விநியோகம் பெறும் கோணக்கரை, முதலியார் தெரு, பஞ்சவர்ணசுவாமி கோவில் பகுதி, டாக்கர் ரோடு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, காமாட்சியம்மன் கோவில் தெரு, பணிக்கன் தெரு, காளையன் தெரு, தியாகராஜ நகர், லிங்கம் நகர், சுப்ரமணிய நகர், குழுமணி ரோடு, பெரியார் நகர், காவேரி நகர், ஜெயராம் நகர், மல்லாச்சிபுரம், வைரம் நகர், சோழராஜபுரம் மற்றும் பாளையம் பஜார் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருச்சி தென்னூர் செயற்பொறியாளர் இயக்கலும், காத்தலும் முத்துராமன் தெரிவித்துள்ளார்.