ஜூன் 10 முதல் மீண்டும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்

54பார்த்தது
ஜூன் 10 முதல் மீண்டும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நேரடியாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்று வநதது. மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் இக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகளும் வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து வரும் திங்கள்கிழமை (ஜூன் 10) தொடங்கி ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் நேரடியாக பெறப்படும் என தெரிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி