திருச்சி மாவட்டம், முசிறி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதிய அரசு பேருந்துகள் இயக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து முசிறியிலிருந்து மணமேடு, கொளக்குடி வழியாக பவித்திரத்திற்கு ஒரு புதிய பேருந்தையும், முசிறியிலிருந்து தும்பலம், தா. பேட்டை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு ஒரு புதிய பேருந்தையும் கொடியசைத்து துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார். கரூர் கோட்ட மேலாளர் சுரேஷ், முசிறி கிளை மேலாளர் ரமேஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.