திருச்சி மாவட்டம் துறையூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தெரு நாய்கள் கடித்து மூன்று பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து துறையூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டுகளில் சுற்றித் திரிந்த 41 தெருநாய்களை அரசு விதிமுறைகளின்படி பிடித்து அவைகளுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இப்பணிகள் துறையூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரன், நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் ஆகியோர் தலைமையில் நகராட்சி சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.