தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கூட்டம்

84பார்த்தது
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கூட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கருர் பைபாஸ் சாலையில் உள்ள அண்ணாமலை சாலையில் உள்ள மாநில அலுவலகத்தில் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடகாவிற்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்கக் கூடாது என்று 16ந்தேதி போராட்டம் நெய்வேலியில் நடத்துவது. 1 ஏக்கர் நிலத்திற்கு நஷ்ட ஈடாக ரூ. 60, 000 தர வேண்டும். தண்ணீர் தராத கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு 1 லட்சம் கோடி நஷ்ட ஈடு வாங்க வேண்டும். வடகிழக்கு பருவமழையின் பொழுது பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் காவிரி, வைகை, பாலாறு, தேக்கவும், காவிரி, பாலாறு, தென்பெண்ணை, தாமிரபரணி கொள்ளிடம் மற்றுமுள்ள ஆறுகளில் தடுப்பாணைகள் கட்டி தண்ணீரை தேக்கி வைத்து கடலில் வீணாக கலக்காமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குவிண்டால் நெல்லுக்கு ரூ. 5400/-ம் டன் கரும்புக்கு ரூ. 8100/- 1 வழங்குவதுடன் ஆரூரான் கரும்பு மில் விவசாயிகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுபடி பாக்கி பணம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் மேகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி