முசிறி அருகே உள்ள ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருக்கலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் சகாதேவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற ஜம்புநாதபுரம் போலீசார் சகாதேவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.