குண்டா் தடுப்பு சட்டத்தில் மூவா் கைது

85பார்த்தது
குண்டா் தடுப்பு சட்டத்தில் மூவா் கைது
ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த 6 ஆம் தேதி நடந்த கோஷ்டி மோதலில் நெப்போலியன், கதிரவன் ஆகியோரைக் கொன்ற வழக்கில் 11 போ் ஸ்ரீரங்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களில் லால்குடி எசனக்கரை ர. அஜய் (23), உ. சரண்ராஜ் (24) ஆகியோரின் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதேபோல கடந்த மே 13 ஆம் தேதி வோ்ஹவுஸ் பேருந்து நிறுத்தம் அருகே போதை மாத்திரைகள் விற்று பாலக்கரை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்ட பாலக்கரை கூனி பஜாா் ரௌடி வெ. பாண்டி (எ) வீரமுத்து (27) என்பவரின் தொடா் குற்றங்களைத் தடுக்கும் விதமாக அவரைக் குண்டா் சட்டத்தில் கைது செய்யவும் மாநகர காவல் ஆணையா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி