திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டலிஸ்ட் 7-வது மாநில அளவிலான நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை பயிற்சி முகாம் தொடக்க விழா திருச்சி கோர்ட் யார்டு ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவேரி மருத்துவமனை செயல் இயக்குனரும் இணை நிறுவனமான டாக்டர் பி செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.
துறை தலைவரும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எஸ் வேல்முருகன் முன்னிலை வகித்தார் இதில் பாரதிதாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் இயக்குனர் அசித் பர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த பயிற்சி முகாம் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் லேப்ராஸ்கோபிக் செய்முறை சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
இதில் தமிழக முழுவதும் இருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இறுதி நாள் நிகழ்ச்சியாக நாளை மறுநாள் காவேரி மருத்துவமனையில் நடைபெறும் அறுவை சிகிச்சை நேரடியாக பயிற்சி முகாமில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.