திருச்சி விமான நிலையத்தை சுற்றி மெகா சுற்றுச்சுவர்

64பார்த்தது
திருச்சி விமான நிலையத்தை சுற்றி மெகா சுற்றுச்சுவர்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை உள்ளது. 

வாரத்திற்கு சுமார் 100 சர்வதேச விமானங்களும், சுமார் 70 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் புறப்பாடு பகுதியில் 3,500 பயணிகளையும், வருகை பகுதியில் 2,500 பயணிகளையும் கையாள முடியும் என்றாலும் கடந்த பொங்கல் பண்டிகை நேரத்தில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பயணிகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. திருச்சி விமான நிலைய ஓடுபாதையின் நீளம் தற்போது 8,136 அடியாக உள்ளது. 

இதனை 12,500 அடியாக நீட்டிக்க வேண்டும் என்பதுதான் விமான நிலைய ஆணையத்தின் திட்டம் ஆகும். 12,500 அடியாக ஓடுபாதை நீட்டிக்கப்பட்டால் அது தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஓடுபாதையாகவும், இந்திய அளவில் ஐந்தாவது பெரிய ஓடுபாதையாகவும் இருக்கும். ஓடுபாதை நீட்டிப்பு பணியை தொடங்குவதற்கு முன்பாக நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் சுமார் 20 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருக்கிறது. 

இதற்காக எல்லையை நிர்ணயம் செய்யும் பணியில் நிலம் கையகப்படுத்தும் பிரிவு தனிதாசில்தார், நில அளவையர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி