போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது

59பார்த்தது
போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது
திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியா செல்வதற்காக பயணிகள் நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது இமிகிரேஷன் அதிகாரி ஒரு அங்கு நின்ற பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தார். அப்பொழுது சந்தேகமடைந்த அந்த அதிகாரி பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார். அப்பொழுது அந்த பயணி தன்னுடைய பெயர் சின்னையா (வயது 58) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் என்று கூறினார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது சின்னையா முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து
இமிகிரேஷன் அதிகாரி சின்னையாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் தன்னுடைய பிறந்த தேதி, தந்தை பெயர்ரை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்று மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரி பிரவீன் குமார் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சின்னையா மீது ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி