திருச்சியில் வாலிபரின் வெள்ளி செயினை பறித்த நபர் கைது

81பார்த்தது
திருச்சியில் வாலிபரின் வெள்ளி செயினை பறித்த நபர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் இஷாத் அகமது ( வயது20 ) இவர் திருச்சி தஞ்சை சாலையில் நடந்து சென்றார். அப்போது இவர் பின்னால் வந்த 2 நபர்கள் இஷாத் அகமத் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி செயினை பறித்து சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வரகனேரி கல்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா (வயது22 ) என்ற வாலிபரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி