மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்டச் செயலாளர் ப. குமார் தலைமையில், ஜெயலலிதா உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திருவெறும்பூர் கணேசா ரவுண்டானாவில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு, முன்னாள் எம். பி. யும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான ப. குமார் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும் அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ். எஸ் ராவணன், எஸ். கே. டி கார்த்திக். பெல் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் சுபத்ரா தேவி, சாருமதி, மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் வட்டச் செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.