போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டிகள் பறிமுதல்

52பார்த்தது
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டிகள் பறிமுதல்
திருச்சி
மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகதள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்ட உள்ளதாக பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து முக்கிய சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் தள்ளுவண்டிகளை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
அதன்படி திருச்சி சாஸ்திரி ரோடு, இரட்டை வாய்க்கால், தில்லை நகர் 11வது கிராஸ், 7வது கிராஸ் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் செயல்படும் சிக்கன் பானி பூரி, டிபன் தள்ளுவண்டி கடைகளை தில்லை நகர் 80 அடி சாலை பகுதியில் நிறுத்தி நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனாலும் மேற்கண்ட சாலைகளில் இரவு நேரங்களில் தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வந்தது. பகல் நேரங்களில் அந்த தள்ளுவண்டிகள் போக்குவரத்து இடையூறாக அதே பகுதிகளிலேயே நிறுத்தி வைத்திருந்தனர் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட 15 தள்ளுவண்டி கடைகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றினர் உதவி ஆணையர் வெங்கடேசன் ஆலோசனையின் படி இளநிலை பொறியாளர் ரமேஷ் உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம் மற்றும் அலுவலர்கள் சாஸ்திரி ரோடு இரட்டை வாய்க்கால் தில்லை நகர் 11வது கிராஸ் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிக் கடைகளை கைப்பற்றி 80 அடி சாலையில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இது பற்றி அறிந்த 7 கடைக்காரர்கள் விரைந்து வந்து தங்களது தள்ளுவண்டியை மீட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி