திருச்சி மாவட்டத்தில் 6200 எக்டேர் பரப்பில் குருவை சாகுபடி

543பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் 6200 எக்டேர் பரப்பில் குருவை சாகுபடி
திருச்சி மாவட்டத்தில் 6200 எக்டர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது மேட்டூர் அணையில் தற்போது 112.18 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 4927 கன அடி என்ற அளவில் உள்ளது. இதனால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்ற நிலை உள்ளது. 

இதை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை வழக்கம்போல் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை அடுத்து வேளாண்மை துறை டெல்டா பகுதி குருவை சாகுபடிக்கு தேவையான விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தடை இன்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு விவசாயிகள் துயர் துடைக்கும் வகையில் முன்னதாகவே குருவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்தும் அரசு முன்கூட்டியே அறிவித்தது. இதனால் டெல்டா பகுதி முழுவதும் குருவை சாகுபடி பணிகள் விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி