அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கலெக்டர் அழைப்பு

58பார்த்தது
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கலெக்டர் அழைப்பு
ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.
இப் பள்ளியில் 2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கி நடைபெறுகிறது. இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து வசதி, ரயில் கட்டணச் சலுகை, தங்கும் விடுதி, மாதந்தோறும் ரூ. 400 ஊக்கத்தொகை, இலவச சீருடை, இலவச மிதிவண்டி, இலவச காலணி ஆகியவற்றை விதிமுறைகளுக்குள்பட்டு பெற்றுக் கொள்ளலாம். 3 ஆண்டு பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் தேர்வு இயக்ககத்தால் தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தச் சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிமூப்பு அடிப்படையி இசைப் பள்ளிகளிலும், இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களிலும் வேலைவாய்ப்பு பெறலாம். எனவே, திருச்சி மாவட்டத்ை சேர்ந்த விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இசைப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: அரசு இசைப்பள்ளி, ஸ்ரீரங்கம், மேலூர் சாலை, மூலத்தோப்பு.
இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை 0431-2962942 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி