(பிப். 21)மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்

64பார்த்தது
(பிப். 21)மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு மதுரைக்குப் புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் (வ. எண் 22671) விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி வழியாக செல்லும்.


மதுரையிலிருந்து கச்சிகுடாவுக்கு புதன்கிழமை காலை 5. 30 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (வ. எண் 07192), காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காலை 5. 30 மணிக்குப் புறப்படும் பல்லவன் அதிவேக விரைவு ரயில் (12606), மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காலை 6. 40 மணிக்குப் புறப்படும் வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி 12636) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் வழியாக விழுப்புரம் வந்தடைந்து பின்னர் சென்னைக்குச் செல்லும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :