திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாட்டாா் மண்டகப்படியின் அம்மன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி பூதநாயகி அம்மன் வீதியுலாவைத் தொடா்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனா். பின் கடைவீதி பகுதி பள்ளிவாசல் அருகில் அம்மன் பல்லக்கில் இருந்து இறக்கப்பட்டு அங்கு பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ஜெயலெட்சுமி, ஊா் முக்கியஸ்தா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். புதன்கிழமை விடியற்காலை ஆலய திடலில் பொங்கல், கிடா வெட்டுதல் நிகழ்வும் நடைபெற்றது. விடையாற்றி மண்டகப்படி நிகழ்ச்சியுடனும் திருவிழா வியாழக்கிழமை நிறைவுறுகிறது