திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இளைஞர் ரகளை

3பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல் லப்பட்ட காவலாளி தனிப்படை போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளையோ, சந்தேக நபர்களையோ கைது செய்யும் போதும், விசாரணைக்கு அழைத்துச்செல்லும் போதும் அனைத்து போலீசாரும் தற்போது எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திருச்சியில் மதுபோதையில் வாலிபர் ஒருவர் போலீசாரிடமும், பொதுமக்களிடமும் வம்பிழுத்து தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் திருச்சி மத்திய பஸ்நிலைய பகுதியில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதுபற்றி ரோந்து போலீசாருக்கு தகவல் பறந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை அங்கிருந்து போகும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபர் போலீசாரிடமும் வம்பிழுத்து தகராறு செய்ய தொடங்கினார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அவரை ஓரமாக சென்று உட்காரும்படி கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து அநாகரீகமாக பேசவே போலீசார் அந்த வாலிபரை விட்டு ஒதுங்கி சென்றுவிட்டனர். தற்போது அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறு செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி