நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை, முன்னாள் அமைச்சர் பா.தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோர் சிறையில் உள்ளவரை சந்தித்தினர்.
பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர் கெட்டு வருகிறது, இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையை கையில் வைத்து முதலமைச்சர் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்' என காட்டமாக தெரிவித்தார்.