பஞ்சாப் பட்டியாலாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ராஜேஸ்வரி பெண்களுக்கான 69 கிலோ இடை பிரிவில் ஸ்குவாட் போட்டியில் 197 என்ற கிலோ எடையை செய்து வெண்கல பதக்கமும், டெலிட் போட்டி முறையில் 198 கிலோ எடையை செய்து தங்கப்பதக்கம் மற்றும் புதிய தேசிய சாதனையும் ஒட்டுமொத்த இடையான 470 கிலோ எடைகளை தூக்கி வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தார். இதேபோல் திருச்சி ஏர்போர்ட்டைச் சார்ந்த ஷேக் அப்துல்லா ஸ்குவாடு முறையில் 245 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கமும், ஒட்டுமொத்தமாக 600 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கமும் வென்றார். இவர்கள் இருவரும் சவுத் ஆப்பிரிக்காவில் அக்டோபர் 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகி உள்ளனர் , இந்நிலையில் இவர்கள் இருவரும் தில்லை நகரில் உள்ள திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வக்கீல் முத்து மாரி, சிறுபான்மை பிரிவு எனர்ஜி புட்ஸ் அப்துல் ரகுமான் , தென்னூர் ஷாஜகான், குருமூர்த்தி, தர்கா காஜா, வாழைக்காய் மண்டி சுரேஷ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.