உலக சுற்றுச்சூழல் தினம் கலெக்டர் பிரதீப் குமார் பங்கேற்பு

67பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தினம் கலெக்டர் பிரதீப் குமார் பங்கேற்பு
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உட்புற தாவரங்களை வழங்கி உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியர் மா. பிரதீப்குமார் கூறியது: இயற்கை சீர்கேடு தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு மற்றும் பல்லுயிர் இழப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு உலக சுற்றுச் சூழல் தினத்தின் கருப்பொருள் நில மீட்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சி தடுப்பு ஆகியவை ஆகும். அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகள் மற்றும் உட்புற தாவரங்களை நல்ல முறையில் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்றார்
முன்னதாக அரசு அலுவலர்கள் அனைவரும் ஆட்சியர் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின 2024ஆம் ஆண்டுக்கான உறுதிமொழியேற்றனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ர. ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமான், உதவி இயக்குநர் ஊராட்சிகள் எஸ். குமார், பசுமை தோழன் காட்வின் க நிஜில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி