திருச்சி முத்தரசநல்லூர் காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் சிட்பன்ட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் சம்பவம் நடந்த நேற்று (ஜூலை 4) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய மனைவி ஹேமா அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.