2025ம் ஆண்டிற்கு மத்திய அரசின் பத்ம விருதுகளான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… விளையாட்டில் தகுதி மற்றும் திறமை உள்ளவா்கள் தங்களுடைய முழு விவரங்களுடன், தங்களுடைய சாதனைக்கான ஆவணங்களுடன் ஜூன். 26 தேதிக்குள் விண்ணப்பங்களை https: //awards. gov. in மற்றும் https: //padmaawards. gov. in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி (தொலைபேசி எண். 0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தொிவிக்கப்படுகிறது