திருச்சி: நிலத்தகராறு; தம்பியை தாக்கி அண்ணன் கைது

73பார்த்தது
திருச்சி: நிலத்தகராறு; தம்பியை தாக்கி அண்ணன் கைது
சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளகுடியைச் சேர்ந்த பிச்சைமகன்கள் விக்னேஸ்வரன், கபிலன். இதில் கபிலன் தனியாக வாடகை வீடு எடுத்து வேலை பார்த்து வருகிறார். விக்னேஸ்வரன் கொத்தனார் சகோதரர்கள் இருவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரத்தில் இருந்த விக்னேஸ்வரன் கபிலனை தாக்கியுள்ளார். காயமடைந்த கபிலன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மேலும் இது குறித்து கபிலன் அளித்த புகார் மீது போலீசார் விக்னேஸ்வரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி