பாஜக அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்கள் கைது

84பார்த்தது
பாஜக அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்கள் கைது
திருச்சியில் கட்சி அலுவலகத்தின் காவலாளியை தாக்கிய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி பீமநகரை சேர்ந்தவர் கோட்டைச்சாமி(55). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பாஜ அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 4 சிறுவர்கள், பாஜ அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதை தடுத்த கோட்டைச்சாமியை உருட்டுக்கட்டை, கல்லால் 4பேரும் தாக்கி விட்டு தப்பினர். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து 4 சிறுவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி