திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் கலைமாமணி முத்தையாவின் 75வது நூல் "பழகிப் பார்த்ததில் இவர்கள் " நூல் அறிமுக விழா நடந்தது.
திருச்சி நகைச்சுவை மன்ற புரவலர்
ரோட்டரி க. கார்த்திகேயன் தலைமையில் , திருச்சி நகைச்சுவை மன்ற அறங்காவலர் மு. பாலசுப்ரமணியன் , முன்னிலையில் நடந்தது. ரோட்டரி சி. சபாபதி வரவேற்றார்.
தஞ்சை ரோட்டரி ஆசிஃப் அலி, தஞ்சை "யோகம் " ரோட்டரி இரா. செழியன் வாழ்த்தி பேசினார்கள்.
பேராசிரியர் முனைவர் த. ராசாராம் நூல் அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்
நூல் ஆசிரியர் கவிஞர் ம. முத்தையா ஏற்புரை யாற்றினார்.
திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் க. சிவகுருநாதன் நிகழ்ச்சியை ஓருங்கிணைத்து, வாழ்த்துரைத்தார்.
இதில் திருச்சி நகைச்சுவை மன்ற நிர்வாகிகள் மணி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே. சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி. சதீஸ்குமார், திருச்சி நகைச்சுவை மன்ற நிர்வாகிகள் மணி, மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
முடிவில் கவாதி. தியாகராஐன் நன்றியுரை கூறினார்.