திருவரங்கம் புது வடக்கு தேவி தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சுதாகர் ( வயது 27 )இவர் அப்பகுதியில் மீட்டர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதி கண்டித்தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23) இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் சுதாகர் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆக்கிரமடைந்த பிரகாஷ் சுதாகரிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த பிரகாஷ் சுதாகரை கத்தியால் குத்தி விட்டார். காயமடைந்த சுதாகர் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிந்து பிரகாஷை தேடி வருகின்றார்.