திருச்சி குத்பிஷா நகரை சேர்ந்தவர் அபுதாகிர் (வயது 28 )ஆட்டோ டிரைவர். இவர் ரபியா (வயது 28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அல் அர்பானி (வயது 8)என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் ரபியா 12 கிராம் தங்க நகைகளை அடகு வைத்துள்ளார்.
இதையடுத்து நேற்று தனது மகன் அல் அர்பான் உடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்ததும் எங்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அபுதாகிர் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரபியா அவரது மகன் அல் அர்பானி
ஆகியோரை தேடி வருகின்றனர்.