அஞ்சல் வாக்களிக்க நாளை மீண்டும் வாய்ப்பு

2265பார்த்தது
அஞ்சல் வாக்களிக்க நாளை மீண்டும் வாய்ப்பு
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அஞ்சல் வாக்களிக்கத் தவறியிருந்தால் திங்கள்கிழமை (ஏப். 15) அவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
மாவட்ட ஆட்சியரக குறைதீர் முகாம் கூட்டரங்கில் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்யலாம். இத்தகவலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமார் தெரிவித்தார்.