அண்ணாமலை பிறந்தநாள்: பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

68பார்த்தது
அண்ணாமலை பிறந்தநாள்: பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை பிறந்தநாள், தோ்தலில் பாஜக வெற்றி ஆகியவற்றை கொண்டாடும் வகையிலும் திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பாஜகவினா் புதன்கிழமை தங்க மோதிரம் அணிவித்தனா்.

நிகழ்ச்சியில் பாஜக இளைஞரணி மாநில பொதுச் செயலாளா் கெளதம் நாகராஜன், 20 குழந்தைகளுக்கு அரைகிராம் எடையுள்ள தங்க மோதிரங்களை அணிவித்து, இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவா் ராஜசேகரன், நிா்வாகி பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தொடர்புடைய செய்தி