வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் முதியவர் பலி

1088பார்த்தது
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் முதியவர் பலி
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று மதியமும் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இந்த நிலையில் திருச்சி மாநகரம் எடமலைப்பட்டி புதூர் அருகே ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் செல்லையா என்கிற முதியவர் மட்டும் இருந்துள்ளார். வீட்டின் மேற்கூரை அவர் மீது விழுந்ததில் அவர் இடிபாடுகளில் சிக்கினார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கிய செல்லையாவை மீட்டனர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி